அரக்கோணம் அருகே மினிலாரி மோதி மாணவி படுகாயம்

X
அரக்கோணம் பழனிபேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மகள் ஹரிபிரியா (வயது 14). இவர் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை ஹரிபிரியா பள்ளி வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எஸ்.ஆர்.கேட் பகுதியில் காஞ்சீபு ரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த மினிலாரி ஹரிபி ரியா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

