ராணிப்பேட்டையில் வாலிபருக்கு கத்தி வெட்டு!

ராணிப்பேட்டையில் வாலிபருக்கு கத்தி வெட்டு!
X
ராணிப்பேட்டையில் வாலிபருக்கு கத்தி வெட்டு!
ராணிப்பேட்டை ஆர்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 26). இவருக்கும், காரை பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை முருகன் வீட்டில் இருந்த போது, திடீரென வீட்டிற்குள் நுழைந்த வினோத் மற்றும் அஜீத் ஆகிய இருவரும் முருகனின் முகம், தாடை மற்றும் கைகளில் கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த முருகனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர். அஜீத்தை தேடி வருகின்றனர்.
Next Story