மசாஜ் செண்டர் பெயரில் விபச்சாரம் : மக்கள் புகார் !

X
கோவை பாப்பம்பட்டி மற்றும் கண்ணம்பாளையம் பகுதிகளில் மசாஜ் செண்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெற்று வருவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். சுமார் 9 மசாஜ் மையங்களில் இளம் பெண்கள் சாலையோரத்தில் நின்று இளைஞர்களை கட்டாயமாக விபச்சாரத்திற்கு அழைக்கின்றதாகவும், போதைப்பொருட்கள் பரவலும் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டினர். இதை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த அவர்கள், நடவடிக்கை இல்லையெனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

