கோவை: பெட்ரோல் பங்கில் தீவிபத்து: மினி வேன் எரிந்து நாசம் !
கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த சம்பத்குமார், நண்பருடன் நேற்று மினி வேனில் குறிச்சிகுளக்கரையிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார். பெட்ரோல் நிரப்பிய பிறகு, வேனை ஸ்டார்ட் செய்தபோது திடீரென புகை எழுந்தது. உடனே இருவரும் வேனிலிருந்து இறங்கி அதை சிறிது தூரம் நகர்த்தினர். பின்னர் வேன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காற்று வேகமாக வீசியதால் தீ வேகமாக பரவ, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பவுடர் மூலம் தீயை அணைக்க முயன்றனர். பின்னர் வந்த தீயணைப்பு படையினர் தண்ணீர் பீசி தீயை கட்டுப்படுத்தினர். முழுமையாக எரிந்த வேன் நாசமானது. தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story



