சாலை விபத்தில் மரத்தில் மோதிய பேருந்து.

சாலை விபத்தில் மரத்தில் மோதிய பேருந்து.
X
மதுரை உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் டூவீலரில் சென்றவர் படுகாயம் அடைந்தார்.
மதுரை தேனி அரசு பேருந்து நேற்று (ஜூலை .28) காலை டிரைவர் ஆறுமுகம் என்பவர் ஓட்டி வந்தார். இவர் உசிலம்பட்டி பொட்டுலுபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்ட கருப்பன் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே பூதிபுரத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வன் (19) என்பவர் இருசக்கரத்தை வாகனத்தை ஓட்டி வந்து பேருந்துக்கு முன்பாக உசிலம்பட்டி ரோட்டில் திரும்ப முயன்றுள்ளார் . அப்போது நிலை தடுமாறி பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதியதுடன் ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் செந்தமிழ் செல்வன் காயம் அடைந்தார். பேருந்து பயணிகள் சிலரும் காயமடைந்தனர் . இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story