மதுரை மாமன்ற கூட்டத்தில் அமளி.

மதுரை மாமன்ற கூட்டத்தில் அதிமுக பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் நகரில் கட்டிடங்களுக்கான வரி விதிப்பில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து செய்தி வெளியானதில் 5 மண்டல தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். இது குறித்து விசாரிக்க டிஐஜி தலைமையிலான விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (ஜூலை .29)மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக உறுப்பினர்கள், இந்த முறைகேட்டிற்கு மேயர் இந்திராணி பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மாமன்ற கூட்டத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story