ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிற்கு கழிவறையில் பிறந்த பெண் குழந்தை

X
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிற்கு கழிவறையில் பிறந்த பெண் குழந்தை ரயில்வே துறை அதிகாரிகள் 25 நிமிடம் ரயிலை நிறுத்தி தாயையும்,குழந்தையும் 108 ஆம்புலன்ஸில் திருப்பத்தூருக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகு ரயிலை இயக்கி சென்றதால் பரபரப்பு* வெஸ்ட்பெங்கால் மாநிலத்தை சேர்ந்தவர் கிஷான் மனைவி அம்ரிதா தம்பதியினர் இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆண நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தங்கி கூலி தொழில் செய்து வருகின்றனர் மேலும் அம்ரிதா 9 மாத நிறைமாத கற்பனையாக இருந்த நிலையில் தலைப்பிரசவத்திற்கு சொந்த ஊர் செல்ல அதிகாலை தம்பதியினர் இருவரும் பெங்களூரில் இருந்து வெஸ்ட் பெங்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தனர். அப்போது ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்தபோது வயிற்று வலியால் துடித்த அம்ரிதா தனது கணவருடன் கழிவறைக்கு சென்றள்ளார். அப்போது கழிவறையிலேயே கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை தனது கணவருக்கு கழிவறையிலிருந்து அம்ரிதா தெரிவித்துள்ளார். இதனால் கிசான் இதுகுறித்து ரயில் பெட்டியில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதவிற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் டிக்கெட் பரிசோதகர் பெட்டியில் பயணம் செய்த பெண்களுக்கு தெரிவித்து கழிவறையில் பிரசவ பெண்ணிற்கு உதவுமாறு அனுப்பினார். இதனை தொடர்ந்து இருகுறித்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் மேலாளருக்கு தகவல் தெரிவித்தார் பின்னர் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை நிறுத்தி கழிவறையில் பிரசவம் ஆகி இருந்த தாயையும் சேயையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ரயில்வே மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ரயில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது இருந்தாலும் கர்ப்பிணி பெண்ணுக்கு ரயில்வே நிர்வாகம் செய்த உதவியை பயணிகள் பலரும் பாராட்டி வருகின்றனர். ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கழிவறையில் பிரசவமான சம்பவம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

