வரதராஜபுரம் அடையாறு கால்வாயை துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்

X
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகாவில் வரதராஜபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. ஆதனுார், ஒரத்துார், சோமங்கலம் ஆகிய பகுதிகளில் துவங்கும் அடையாறு கிளை கால்வாய், வரதராஜபுரத்தில் இணைந்து, சென்னை பட்டினப்பாக்கம் கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில், அடையாறு கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரால், வரதராஜபுரம் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. வெள்ள பாதிப்பை தடுக்க, அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், வரதராஜபுரத்தை கடந்து செல்லும் அடையாறு கால்வாயில் வளர்ந்து கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, துார் வார வேண்டும் என, பொது மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

