ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துகளை பாதுகாத்திரும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழு தலைவர் கே.வீ.தங்கபாலு முன்னால் எம்.பி தலைமையில் இணைச் செயலாளர் நிதின் கும்பல்கள், ஒருங்கிணைப்பாளர் S.S.ராமசுப்பு முன்னால் எம்.பி பொதுச் செயலாளர் . செல்வம் ஆகியோர் வருகை தந்தனர். பரமக்குடி எல்லையில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் நிர்வாகிகளிடம் காங்கிரஸ் கட்சி சொத்து விபரம் குறித்து கேட்டறிந்தார் காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராஜாராம் பாண்டியன், தெய்வேந்தின் ரமேஸ் பாபு, ஜோதிபாலன், சரவண காந்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாரிராஜன், கே.ஆர். ஆதி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம். அருண் பாண்டியன், அகில இந்திய மகிளா காங்கிரஸ் உறுப்பினர் ராமலட்சுமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து பரமக்குடி நகராட்சி அருகே உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொந்தமான இடத்தை தலைவர் கே வி தங்கபாலு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இதன் பின் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான இடங்களை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் அந்த இடங்களை சில இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது அதனை கண்டறிந்து அதனை மீட்பதற்கு உண்டான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.தமிழ்நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார் இதன் காரணமாக 40 தொகுதிகளை இந்தியா கூட்டணிவெற்றி பெற்றது. தற்போதும் தமிழகத்திற்கு பிரதமர் மோடி வர வேண்டும் அப்போது தான் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதனால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வர வேண்டும் என விரும்புகிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் தமிழகம் பெரிய அளவிலான வளர்ச்சி பெற்றுள்ளது இதை மத்திய அரசே கூறுவது முதல்வர் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்தார்
Next Story

