ராமநாதபுரம் மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வி கே சுரேஷ் தலைமையில் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்
ராமநாதபுரம் மாவட்ட மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வி கே சுரேஷ் தலைமையில் ஏராளமான மதிமுகவினர் ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர் அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, ஆகியோர் மீது இணையதளத்தில் அவதூறு செய்திகள் பரப்பி வரும் மல்லை சத்தியா , சம்பத், பஷீர், துரைச்சாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடு ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி சந்தீஸ் அவர்களை சந்தித்து மதிமுக மாவட்ட செயலாளர் வி.கே.சுரேஷ் தலைமையில் ஏராளமானோர் புகார் மனு அளித்தனர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவதூறு பரப்பி வருபவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தால் தடுத்து நிறுத்துவோம் எனவும் மாவட்ட செயலாளர் சுரேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மேலும் கூறுகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 55 ஆண்டு காலமாக பொது வாழ்வில் தூயவராகவும் 30 ஆண்டு காலமாக நாடாளுமன்றத்தில் மூத்த நாடாளுமன்ற அரசியல் தலைவராகவும் மக்கள் பணியாற்றி வருகிறார் லட்சக்கணக்கான இளைஞர்களின் வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறார் தலைமை நிலைய செயலாளர் துறை வைகோ எம்பி இளைஞர்களை நல் வழிபடுத்தி அரசியலில் தூய்மையை ஏற்படுத்தி வருகிறார் இருவர் மீது தொடர்ச்சியாக நான்கு நபர்கள் அவதூறு பரப்பி வருகின்றனர் இவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் நான்கு நபர்களும் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைந்தால் தடுத்து நிறுத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்து பேசினார் மாநில மீனவர் அணி செயலாளர் பேட்ரிக் மாநில நிர்வாகியும் பரமக்குடி நகராட்சி துணைத் தலைவர் குணா, மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சத்தியேந்திரன் ,திருப்புல்லாணி செல்வராஜ் ,ராமநாதபுரம் நகர் செயலாளர் காளி, மாவட்ட நிர்வாகி வெற்றி வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,
Next Story



