நத்தம் அருகே மஞ்சி தொழிற்சாலையில் தீ விபத்து

X
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அண்ணா நகரை சேர்ந்தவர் கண்ணன் இவருக்கு சொந்தமான மஞ்சி தொழிற்சாலை நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி செயல்பட்டு வருகிறது. இந்த மஞ்சி தொழிற்சாலையில் இன்று திடீரென தீ பிடித்து விபத்துக்குள்ளானது.இதில் மஞ்சிகளில் தீ மளமளவென பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து நத்தம் தீயணைப்புத் துறையினருக்கு அக்கம் பக்கத்தில் தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை போராடி அணைத்து வருகின்றனர். தற்போது தீயில் கருகி மஞ்சிகள் மற்றும் பொருள்களின் மதிப்பு மட்டும் சுமார் 10 லட்சம் என தெரிய வருகிறது. இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ வைத்து நடப்பது தெரியவந்துள்ளது.
Next Story

