ஏமூர் பிரிவு அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. நண்பர்கள் இருவர் படுகாயம்.
ஏமூர் பிரிவு அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. நண்பர்கள் இருவர் படுகாயம். கரூர் மாவட்டம் , கிருஷ்ணராயபுரம் தாலுகா ,கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் வயது 55. இவரது நண்பர் சேங்கல் தெற்கு பகுதியைச் சேர்ந்த மலையாளம் வயது 62. இவர்கள் இருவரும் ஜூலை 28ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் கரூர் - திருச்சி சாலையில் அவர்களது டூவீலரில் சென்றனர் . டூவீலரை ராஜமாணிக்கம் ஓட்டிச் சென்றார். இவர்களது வாகனம் ஏமூர் பிரிவு அருகே சென்றபோது,சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது சாலையின் பக்கவாட்டு வழியில் இருந்து வேகமாக காரில் வந்த திண்டுக்கல் மாவட்டம் சாமியார் பட்டியை சேர்ந்த தர்ஷன் கார் ராஜமாணிக்கம் ஓட்டிய டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலரில் சென்ற இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் , உடனடியாக அவர்களை கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக மலையாளம் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட வெள்ளியணை காவல்துறையினர் காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தர்ஷன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story





