காந்திகிராமம் - டூவீலர் மீது அரசு பேருந்து மோதி இளைஞர் இளம்பெண் படுகாயம்.

காந்திகிராமம் - டூவீலர் மீது அரசு பேருந்து மோதி இளைஞர் இளம்பெண் படுகாயம்.
காந்திகிராமம் - டூவீலர் மீது அரசு பேருந்து மோதி இளைஞர் இளம்பெண் படுகாயம். கரூர் மாவட்டம், சோமூர், செல்லாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் வயது 24. அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் தாரணி வயது 21. இவர்கள் இருவரும் ஜூலை 27ஆம் தேதி காலை 9:45 மணி அளவில் கரூர் - திருச்சி சாலையில் டூ வீலரில் சென்றனர். இவரது வாகனம் காந்தி கிராமம் பகுதியில் உள்ள மேம்பாலம் பகுதியில் சென்ற போது, எதிர் திசையில் கோவையைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் வேகமாக ஓட்டி வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் சுதாகர் மற்றும் தாரணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக சுதாகர் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட பசுபதிபாளையம் காவல்துறையினர் பேருந்தை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கதிர்வேல் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Next Story