தென்காசியில் குற்றாலத்தில் சாரல் திருவிழா நிறைவு

தென்காசியில் குற்றாலத்தில் சாரல் திருவிழா நிறைவு
X
குற்றாலத்தில் சாரல் திருவிழா நிறைவு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஒரு வாரகாலமாக சாரல் திருவிழா நடைபெற்று வந்தது. நேற்று சாரல் திருவிழாவின் நிறைவுநாள் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமை தாங்கினார். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர். ராணி ஸ்ரீகுமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Next Story