திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் மீது ஏறி தற்கொலை முயற்சி செய்த நபரால் பரபரப்பு.

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் மீது ஏறி தற்கொலை முயற்சி செய்த நபரால் பரபரப்பு. நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு பாதுகாப்பாக மீட்ட காவல்துறை! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜமுன புதூர் பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் பெருமாள் இவருக்கு சென்னம்மாள் என்கிற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு ஆண் ஒரு பெண் என மூன்று குழந்தைகள் உள்ளனர். கட்டிட மேஸ்திரி கூலி செய்து வருகின்றார் நேற்று திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்து தனக்கு தலைவலி மற்றும் நெஞ்சு வலி உள்ளதாக கூறியதை தொடர்ந்து மருத்துவர்கள் தொடர் சிகிச்சை பெற அனுமதித்து மருத்துவம் செய்துள்ளனர். ஆனால் இன்று காலை அவர் செவிலியர் மற்றும் மருத்துவர் ஆலோசனை பெறாமல் திடீரென்று காணாமல் போனதை தொடர்ந்து மருத்துவர்கள் மருத்துவமனையில் இருந்து அவர் வெளியேறி விட்டதாக பதிவு புத்தகத்தில் பதிவிட்டு சென்றதை தொடர்ந்து... இன்று மாலை திடீரென மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் மேல் தளத்தில் ஏறி அமர்ந்து தன்னை முகம் தெரியாத நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்கள் அவர்களிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள் இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கீழே குதிக்க முயற்சி செய்ததினால் பதட்டம் அடைந்த மருத்துவர்கள் நகர காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர காவல் துறையினர் சுமார் அரை மணிநேர போராட்டத்திற்கு பின்பு தற்கொலைக்கு முயன்ற நபரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Next Story

