தமிழக அரசை கண்டித்து கள்ளர் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

X
தமிழகத்தின் பூர்வகுடி மக்களாக வாழ்ந்து வரும் பிரமலைக்கள்ளர்களுக்கு ஆங்கிலேயர் காலத்தில் வழங்கி வந்த உரிமைகளை தொடர்ச்சியாக தமிழக அரசு பறித்து வருகிறது. கள்ளர் சீர்மைப்பு துறையின் கீழ் உள்ள கள்ளர் பள்ளி மாணவர் விடுதிகளை, சமூக நீதி விடுதி என்று பெயர் மாற்றம் செய்து கலாச்சாரங்களை அழித்து வருகிறது. தமிழக அரசின் செயலை கண்டித்தும், கள்ளர் பள்ளிகளை கல்வித்துறையுடன் இணைக்கும் அரசாணை 40 மற்றும் 10 உடனடியாக தமிழக அரசு நீக்க வேண்டும் பிரமலைக் கள்ளர்களுக்கு உரிய உரிமைகளை வழங்க வேண்டும். என வலியுறுத்தி அனைத்து கள்ளர் கூட்டமைப்பு சார்பாக இன்று திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு காவல்துறையினரின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசின் செயலை கண்டித்தும் , பிரைமலை கள்ளர்களுக்கான உரிமைகளை பறிக்கக் கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததால் 25கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Next Story

