முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு கலெக்டர் ஆறுதல்

X
Komarapalayam King 24x7 |29 July 2025 6:37 PM ISTகுமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்பால் முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை மாவட்ட கலெக்டர் துர்கா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ள ஒரு லட்சம் கன அடி நீரானது 16 கண் மதகு வழியாக காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது இதனை அடுத்து காவிரி கரையோர பகுதி பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பாக மீட்டு வருவாய்த் துறையினர் முகாம்களில் தங்க வைத்துள்ளனர். குமாரபாளையத்தில் கலைமகள் வீதி, அண்ணாநகர், மணிமேகலை வீதி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காவேரி வெள்ள நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நகராட்சி திருமண மண்டபத்திலும், புத்தர் தெரு அரசு உயர்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை மாவட்ட கலெக்டர் துர்கா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட உதவிகளை தவறாமல் வழங்க உத்திரவிட்டார். நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தெற்கு நகர தி.மு.க. பொறுப்பாளர் ஞானசேகரன், தாசில்தார் சிவகுமார், இன்ஸ்பெக்டர் தவமணி, மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
