தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்கள், பெற்றோர்கள்.

X
Paramathi Velur King 24x7 |29 July 2025 6:38 PM ISTதலைமை ஆசிரியரை மாற்றக் கோரி பள்ளியை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பெற்றோர்கள்.
பரமத்தி வேலூர், ஜூலை 29: கீழ்சாத்தம்பூர் அருகே தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை மாற் றக் கோரி, மாணவ, மாணவியர், பெற்றோர் பள்ளியை திங்கள்கி ழமை முற்றுகையிட்டனர். பரமத்தி வேலூர் வட்டம். கீழ்சாத்தபூர் ஊராட்சிக்கு உள்பட்ட சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 13 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் திருச்செல்வன், உதவி ஆசிரியர் பன்னீர்செல்வம் என இரு ஆசிரியர்கள் உள்ளனர். இதில் தலைமை ஆசிரியர் திருச்செல்வன் முறையாக பள்ளிக்கு வராமலும், வாரத்தில் ஒருசில நாள்கள் மட்டும் வந்து செல்வதாகவும், பள்ளிக்கு மது போதையில் வரும் அவர் பாடம் நடத்தாமல் தூங்கிவிட்டு செல்வதாகவும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையாம். மேலும், இது குறித்து கடந்த மாதம் முதல்வரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் புகார் அளித்தும் தலைமையாசிரியர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில், திங்கள்கிழமை மாணவர்களின் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்து வந்த பரமத்தி வட்டாரக் கல்வி அலுவலர் புஷ்பராஜன் பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தி, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு குழந்தைகனை பள்ளிக்கு அனுப்பினர்.
Next Story
