மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், குன்னத்தில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன வசதியுடன்கூடிய பேருந்து சேவை

தினந்தோறும் காலை 8 மணிக்கு குன்னத்தில் இருந்து கிளம்பி, பெரம்பலூர், விழுப்புரம், கிளாம்பாக்கம் வழியாக மதியம் 2 மணிக்கு மாதவரத்தை சென்றடையும் வகையிலும், மாதவரத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு கிளம்பி கிளாம்பாக்கம், விழுப்புரம், பெரம்பலூர் வழியாக இரவு 10 மணிக்கு குன்னத்தை வந்தடையும் வகையிலும்
பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், குன்னத்தில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன வசதியுடன்கூடிய பேருந்து சேவையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், குன்னத்தில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன வசதியுடன்கூடிய பேருந்து சேவையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (29.07.2025) குன்னத்தில் இருந்து தொடங்கிவைத்து, பெரம்பலூர் பேருந்து நிலையம் வரை அப்பேருந்தில் பயணம் செய்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் மேலாண்மை இயக்குநர் திரு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் பேருந்து தினந்தோறும் காலை 8 மணிக்கு குன்னத்தில் இருந்து கிளம்பி, பெரம்பலூர், விழுப்புரம், கிளாம்பாக்கம் வழியாக மதியம் 2 மணிக்கு மாதவரத்தை சென்றடையும் வகையிலும், மாதவரத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு கிளம்பி கிளாம்பாக்கம், விழுப்புரம், பெரம்பலூர் வழியாக இரவு 10 மணிக்கு குன்னத்தை வந்தடையும் வகையிலும் இப்பேருந்து இயக்கப்படவுள்ளது. இந்தப் பேருந்து சேவை குறித்து அறிந்த பொதுமக்கள், தங்களது நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், இந்த சேவையினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கடலூர் மண்டல பொதுமேலாளர் திரு.எஸ்.பாண்டியன், பெரம்பலூர் கோட்ட மேலாளர் ராம்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story