தவறி கீழே விழுந்தவர் பலி

X
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்த அடைக்கலம்( 43) என்பவர் அவனியாபுரம் பைபாஸ் ரோட்டில் எம் ஜி எம் நகரில் கட்டப் பட்டு வரும் புதிய கட்டி டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் (ஜூலை.27) வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல புறப்பட்டபோது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அடைந்து படுகாயம் அவரை மதுரை அரசு மருத்துவம னையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை.28) உயிரிழந்தார். இது குறித்து அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

