தூய்மை பணியாளர் தையல் போடும் அவலம்

தூய்மை பணியாளர் தையல் போடும் அவலம்
X
மதுரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் தையல் போடும் அவலம் நடந்துள்ளது
மதுரை உசிலம்பட்டி தலைமை அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கும் அதிகமான நோயாளிகள் வருகின்றனர். இதில் விபத்தில் சிக்கி மற்றும் சிறு சிறு காயங்களுடன் பலர் உள்நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சைக்கு வருகின்ற காயம் அடைந்து வரும் நபர்களை காயம் அடைந்து வரும் நபர்களை கண்ணன் என்னும் தூய்மை பணியாளர் தையல் போடுவதும் மருந்து வைத்து கட்டுவதும் உரிய பாதுகாப்பு இல்லாமல் மருத்துவம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இவர் அங்கு மருத்துவத்திற்கு வரும் நபர்களை இவரே தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வதாகவும், இதனால் கமிஷன் அதிக அளவு இவருக்கு கிடைப்பதாகவும் குற்றச்சாட்டு வெளியாகி உள்ளது. இந்த நபர் மீது ஏற்கனவே இது போன்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு சுமார் ஒருவார காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் மீண்டும் இவர் பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டினை நோயாளிகள் முன்வைக்கின்றனர்.
Next Story