முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி

முத்தாயம்மாள்  பாலிடெக்னிக் கல்லூரி
X
முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி
ஏபிஜே அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி & ராசிபுரம் இன்னர்வீல் சங்கம் சார்பில் இணைந்து நடத்திய ஐம்பெரும் கலை போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் தனி திறமைகளை வெளிபடுத்தி சிறப்பித்தனர். இதில் தமிழ்பேச்சு போட்டி &ஓவிய போட்டி& ஆங்கிலக் கையெழுத்து போட்டி& தமிழ் கையெழுத்து போட்டி &திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி என ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.. இதில் சிறப்பு விருந்தினராக பிரேம் குமார்,தாளாளர் , முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளை, சேலம் மாவட்ட கல்வி அதிகாரி விஜயன், நாமக்கல் மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, இன்னர் வீல் சங்கம் தலைவர் வழக்கறிஞர் ந.சிவலீலாஜோதி கோபிநாத், கல்லூரியின் முதல்வர் விஜயகுமார், கல்லூரியின் துறை தலைவர்கள் , போட்டியின் ஒருங்கிணைப்பாளர் சித்திரம் பவுண்டேஷன் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்..
Next Story