ஆம்பூர் ரயில்வே சுரங்கப்பாதையின் கீழ் தேங்கும் கழிவுநீர் பொதுமக்கள் அவதி

X
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் ரயில்வே சுரங்கப்பாதையின் கீழ் தேங்கும் கழிவுநீர் நோய்தொற்று ஏற்படும் என அச்சமடைந்து ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்* திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட புதுமனை, தார்வழி, பிலால்நகர், ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையின் கீழ் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் சுரங்கப் பாதையில் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், மற்றும் பள்ளி மாணவர்கள் நோய் தொற்று அபாயம் ஏற்படும் என அஞ்சமடைந்து, ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும் மழைக்காலங்களில் அதிக அளவு கழிவுநீருடன் சேர்ந்து மழை நீர் தேங்கி நிற்பதாகவும் தற்பொழுது கழிவுநீர் கால்வாய் முறையாக இல்லாததால் இப்பொழுது கழிவுநீர் மட்டுமே தேங்குவதாகவும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் இதுகுறித்து கண்துடைப்பிற்காக அவ்வப்போது மட்டுமே கால்வாயை சரிசெய்வதாக அவ்வழியாக செல்லும் குற்றஞ்சாட்டுகின்றனர்
Next Story

