அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சின்னம்மா அவர்களின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் கோபால் நகராட்சியில் மனு.

X
Rasipuram King 24x7 |29 July 2025 9:33 PM ISTஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சின்னம்மா அவர்களின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் கோபால் நகராட்சியில் மனு.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சின்னம்மா அவர்களின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் கோபால் நகராட்சியில் மனு. ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தை அணைப்பாளையம் கிராமத்திற்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்து, 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் வரிசையில் நின்று நகராட்சியில் மனு அளித்தனர்.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் ஆணைக்கிணங்க நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் என். கோபால் அவர்கள் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பேருந்து நிலையம் இடம் மாற்றம் சம்பந்தமாக நகராட்சியில் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தற்போது செயல்பட்டு வரும் புதிய பஸ் நிலையம், சுமார் 8 கிமீ சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள அணைப்பாளையம் கிராமத்திற்கு மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு தொடக்கத்தில் இருந்து, அதிமுக கம்யூ, மதிமுக, தேமுதிக, பா.ஜ,க, வணிகர் சங்கங்கள் மற்றும் தனியார் அமைப்பினர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ராசிபுரம் பஸ் நிலையம் மீட்பு குழுவினர் என்ற பெயரில், கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பஸ் நிலையத்தை மாற்றக்கூடாது என, உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பு மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேரடி விசாரணைக்கு பின், பொதுமக்கள் ஆட்சேபனை அல்லது கருத்து வரும் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ அல்லது ராசிபுரம் நகராட்சி அலுவலகத்திலோ கொடுக்கலாம் என ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் 500க்கு மேற்பட்ட பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கோபால் தலைமையில் வரிசையில் நின்று தங்களது மனுக்களை நகராட்சி நிர்வாகத்திடம் அளித்தனர். அதில், ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தை அணைப்பாளையம் கிராமத்திற்கு இடமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டுமென கோரி இருந்தனர். மேலும் இந்த மனு அளிப்பது தொடர்பாக ஆணையாளர் அங்கே இல்லாத காரணத்தால் பொறியாளரிடம் வழங்க கேட்டுக் கொண்டனர். அப்போது ஏன் ஆணையாளர் இங்கே வந்து மனுக்கள் பெறவில்லை என அதிமுக சின்னம்மா அவர்களின் சார்பாக பொறுப்பாளர் என். கோபால், அதிகாரி இடத்தில் கேட்டார். இதற்கு முறையாக பதில் அளிக்காமல் மனுக்களை கடமைக்கு பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஓரே நேரத்தில் நகராட்சியில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
