போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு சிலம்பாட்டம் கபடி

பள்ளி வளாகத்தில் பொருட்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன், போதையை ஒழிப்போம், போதை அழிவின் பாதை, புகைத்தல் புற்றுநோயை உருவாக்கும், வேண்டாம் வேண்டாம் போதைப் பொருள் வேண்டாம். ஒழிப்போம் ஒழிப்போம் போதைப் பொருட்களை ஒழிப்போம் என்று கோசமிட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர் நிலைப் பள்ளி சார்பில் 29-7-2025 இன்று போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு சிலம்பாட்டம் கபடி ஆட்டம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் மாயக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாணவ மாணவிகள் போதைப் பொருட்களை பயன்படுத்த மாட்டேன், பள்ளி வளாகத்தில் பொருட்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன், போதையை ஒழிப்போம், போதை அழிவின் பாதை, புகைத்தல் புற்றுநோயை உருவாக்கும், வேண்டாம் வேண்டாம் போதைப் பொருள் வேண்டாம். ஒழிப்போம் ஒழிப்போம் போதைப் பொருட்களை ஒழிப்போம் என்று கோசமிட்டனர். மாணவர்கள் சிலம்பாட்டம் ஆடினர். மாணவ மாணவிகள் கபடி விளையாடினர். பள்ளி ஆசிரியர்கள் அருணா கார்த்திகா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story