திமிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குரங்குகள் அட்டகாசம்!

திமிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குரங்குகள் அட்டகாசம்!
X
ஆரம்ப சுகாதார நிலையத்தில் குரங்குகள் அட்டகாசம்!
திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் சிகிச்சைக்கு கர்ப்பிணிகள் மற்றும் புறநோயாளிகள் எடுத்து வரும் பைகளை பிடுங்கிக்கொண்டு அச்சுறுத்தும் வகையில் அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களில் உள்ள பெட்ரோல் டேங்க் கவர்களை கிழித்து அதில் வைத்திருக்கும் பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடிநீர் குழாய்களை அடிக்கடி திறந்து விட்டு விட்டு ஓடி விடுவதால் குடிநீர் வீணாகிறது. குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் பட்டாசு வெடித்து அவற்றை விரட்டுகின்றனர். ஆனால் சிறிது நேரத்திற்குள் திரும்பவும் மருத்துவமனை வளா கத்திற்குள் வந்து அட்டகாசம் செய்து வருகின்றன. எனவே குரங்குகளை பிடித்து காட்டுப் பகுதியில் விடுமாறு பொதுமக்கள்,கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story