ஓச்சேரி: காய்கறி லாரியில் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

ஓச்சேரி: காய்கறி லாரியில் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
X
காய்கறி லாரியில் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
காவேரிப்பாக்கத்தை அடுத்த அவளூர் போலீஸ் நிலைய எல் லைக்கு உட்பட்ட ஒச்சேரி, சித்தஞ்சி, கரிவேடு, மாமண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீஸ்காரர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஒரு மினி லாரி கரிவேடு பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தப்பட் டது. பின்னர் அங்கு ஸ்கூட்டரில் அமர்ந்திருந்த நபரிடம், வேன் டிரைவர் ஒரு மூட்டையை கொடுத்துள்ளார். அப்போது அவ்வழி யாக சென்ற போலீசார் சந்தேகமடைந்து அவர்களிடம் விசா ரணை செய்தனர்.அதில் லாரியில் இருந்து இறக்கிய மூட்டையில் தடைசெய்யப் பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தினர். அதில் வேன் டிரைவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவை சேர்ந்த முத்து (வயது 45) என்பதும், ஆந்திராவில் இருந்து காய்கறிகள் ஏற்றி வரும்போது கரிவேடு பகுதியை சேர்ந்த ராஜ் குமார் (39) என்பவருக்கு புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் லாரி, புகையிலை பாக் கெட்டுகள், ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story