கரூர்-மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து சற்று குறைந்தது.

கரூர்-மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து சற்று குறைந்தது.
கரூர்-மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து சற்று குறைந்தது. கர்நாடக மாநிலத்தில் கொட்டி தீர்த்த கன மழையால் கர்நாடகா அணைகள் நிரம்பி உபரி நீர் கடந்த சில நாட்களாக திறக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணையின் கொள்ளளவான 120 அடியை எட்டி உபரிநீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு அதிகாலை 4 மணி அளவில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 500 கன அடி நீர்வரத்து இருந்தது. இதில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றிலும் பாசன வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டது. அதே சமயம் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு நேற்று காலை ஆறு மணி நிலவரப்படி 1,31,746கன அடி நீர் வரத்து இருந்தது. இதில் 1,30,276 கன அடி நீர் காவிரி ஆற்றிலும் நான்கு பாசன வாய்க்கால்களில் 1470 கன அடி நீரும் திறக்கப்பட்டது. இன்று காலை மாயனூர் கதவணைக்கு 1,30,180கன அடியாக குறைந்தது. இதே போல காவிரி ஆற்றில் 1,28,710 கன அடி நீரும் ,நான்கு பாசன வாய்க்கால்களில் 1470 கன வீதம் திறக்கப்பட்டுள்ளது. மாயனூர் கதவணைக்கு நேற்றைய நிலவரத்தை ஒப்பிடும்போது இன்று தண்ணீரின் வரத்து சற்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story