பாட்டக்கரை பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடி திருவிழா

பாட்டக்கரை பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடி திருவிழா
X
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பாட்டக்கரை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பாட்டக்கரை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடைபெற்றது. திருவிழா தொடக்கமாக ஸ்ரீ முருக பெருமானுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. மறுநாள் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ பத்திரகாளி அம்மன், ப்ரத்யங்கிரா தேவி, வாராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமமும் பூஜையும் நடைபெற்றது. ஆடிபூரத்தை முன்னிட்டு சுமங்கலி பூஜை மற்றும் வளைகாப்பு விசேஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது. இப்பூஜையில் நாசரேத் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தாக்கள் ஜெயராகவன் மற்றும் விஜயராகவன், சிற்பி கணேசன், நாசரேத் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Next Story