சக்தி கரகம், தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்
மதுரை மாவட்டம் வலையங்குளம் குமரவேல் நகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் 2-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையுடன் பூஜை நடைபெற்றது . நேற்று (ஜூலை.29) இரவு பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக கருப்பணசாமிக்கு படையல் சாத்தினர். இன்று மாலை முளைப்பாரி ஊர்வலமும் நாளை (ஜூலை .31) அன்னதானம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் முருகேசன். பொருளாளர் முனியசாமி தர்மகத்தா பாலு மற்றும் அப் பகுதியினர் செய்திருந்தனர்.
Next Story





