ஏற்காட்டில் ஓட்டல் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல்

X
ஏற்காடு ஒண்டிகடை பகுதியில் திருமூர்த்தி என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு கடந்த 26-ந் தேதி இரவு தர்மபுரி மாவட்டம் அரூர் சூரப்பட்டியை சேர்ந்த பொம்மிடி போலீஸ் நிலைய ஏட்டு சிங்காரவேலன், அவரது நண்பர்கள் 3 பேர் உணவு சாப்பிட சென்றுள்ளனர். அவர்கள் உணவு ஆர்டர் கொடுத்துவிட்டு முதலில் வந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மீண்டும் ஆர்டர் கொடுத்த உணவு வர தாமதமாகியதாக கூறி திருமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த திருமூர்த்தி ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார், சிங்காரவேலன், பொம்மிடி வினோ பாஜி தெருவை சேர்ந்த ரவிவர்மன் (25), இந்திரா காலனி துருஞ்சிபட்டியை சேர்ந்த பிரதீஷ் (19), அதே பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார் (23) ஆகியோர் மீது கொலை மிரட்டல் விடுத்தது உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story

