சேலத்தில் சாலை பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

சேலத்தில் சாலை பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
X
நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு
சேலம் குரங்குச்சாவடியில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் தீப்பந்தம் கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில் 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்து தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும், சாலை பணியாளர்களில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தில் கருணை வேலை கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு கோட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் சிங்காரம், முருகபெருமாள், ராஜ்குமார், வடிவேல் உள்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story