பட்டாசு வெடி விபத்து இரண்டு பேர் படுகாயம்
பட்டாசு விபத்து இரண்டு பேர் படுகாயம் அரசு மருத்துவமனையில் அனுமதி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சஞ்சய் இவர் குன்னம் பகுதியில் சக்கர விநாயகர் பட்டாசு கடை நடத்தி வருகிறார் இன்று அதிகாலையில் திட்டக்குடியில் இருந்து வெடி வாங்கிக்கொண்டு வரும் பொழுது வேப்பூர் யூனியன் அலுவலகம் அருகே வேகத்தடை மீது ஏறும்போது இருசக்கர வாகனத்தில் வண்டியின் சைலன்சர் மீது உரசி தீப்பற்றி வெடி வெடித்து சிதறி உள்ளது.இதில் எதிர்திசையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த செல்வக்குமார் மகன் சீனிஷ் (12 )வெடி எடுத்துச் சென்ற நபரும் பலத்த காயங்களுடன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் இந்த வெடி விபத்தில் சுமார் 9க்கும் மேற்பட்ட வீட்டில் ஜன்னல்கள் சேதம் அடைந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்த விபத்து குறித்து குன்னம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story



