அரசு கொண்டுவரும் ஸ்மார்ட் மீட்டர் கைவிட வேண்டும்.

X
அரசு கொண்டுவரும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கோ, தொழிலாளர்களுக்கோ, பொது மக்களுக்கோ எவ்விதமான நன்மையும் ஏற்பட போவதில்லை. ஒரே நேரத்தில் முழுமையான கொள்முதல் செய்வதால் ஏற்கனவே அதிக கடன் சுமையில் இருக்கும் மின்வாரியம் மேலும் நெருக்கடியான சூழ்நிலையை தான் சந்திக்கும். அதோடு இந்த ஸ்மார்ட் மீட்ருக்கான டெபாசிட் தொகையினை பயனீட்டாளராகிய நுகர்வோரே கட்ட நேரிடும், இதனால் விவசாய மின் இணைப்பு, 100 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோர் பாதிக்க கூடும் என்பதை சுட்டி காட்டி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இன்று வரை அதற்கான ஒற்றை குரலாய் ஒலிக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தில் டெண்டர் எடுக்கும் கம்பெனியே மீட்டரை பொருத்துவதற்கும், அதற்கான கட்டணத்தை வசூல் செய்வதற்குமான உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைவதோடு அவர்களின் உரிமையும் கேள்விக்குறியாகிறது. இந்த நிலையில் தமிழக மின்சார வாரியம் ஒன்றரை கோடி ஸ்மார்ட் மீட்டரை ஒரே நேரத்தில் வாங்குவதற்கான டெண்டரை வரும் 31.07.2025 அன்று அறிமுகப்படுத்துவதாக அறிகிறோம். மின் நுகர்வோர்களை, தொழிலாளர்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (CITU) பெரம்பலூர் வட்டக் கிளை சார்பாக பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மண்டலச் செயலாளர் எஸ். அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நீலமேகம், செந்தில், கலைச்செல்வன், தர்மராஜ், பெரியசாமி, தாஸ், அருண் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

