தென்னிந்திய ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம்

X
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டேரிங் யங்ஸ்டர்ஸ் ஹாக்கி கிளப் சார்பில் பின்லே பள்ளி மைதானத்தில் தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை அணி, தமிழக அஞ்சலக அணி, வணிக வரித்துறை அணி, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்று விளையாடின.நான்காவது நாளாக இன்று மாலை நடைபெற்ற இறுதி போட்டியில் தமிழ்நாடு காவல் துறை அணியும்,சென்னை மத்திய சுங்கம் சேவை வரி அணிகளும் மோதின இதில் 4 - 3 என்ற கணக்கில் தமிழ்நாடு காவல் துறை அணி முதலிடம் பிடித்து சுழல் கோப்பையையும் 50 ஆயிரம் ருபாய் ரொக்க பரிசையும் தட்டி சென்றது. இரண்டாம் பரிசை சென்னை மத்திய சுங்கம் சேவை வரி அணியும் மூன்றாம் பரிசை பெங்களூர் கனரா வாங்கி அணியும் நான்காம் பரிசை விவேக் மெமோரியல் அணியும் வென்றது.
Next Story

