மும்மூர்த்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை

மும்மூர்த்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
X
மன்னார்குடி மும்மூர்த்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்பு
மன்னார்குடி மும்மூர்த்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி செவ்வாய் கிழமையையொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மும்மூர்த்தி விநாயகர் கோவிலில் இன்று இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது மன்னார்குடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பூஜையில் பங்கேற்று திருவிளக்கை அம்மனாக பாவித்து குங்குமம் மஞ்சள் பூக்கள் கொண்டு பூஜைகள் செய்து வழிபட்டனர் தொடர்ந்து திருவிளக்கு மற்றும் மும்மூர்த்தி விநாயகருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது ஒரே கருவறையில் மூன்று விநாயகர் ஒன்றாக காட்சியளிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.
Next Story