ராமநாதபுரம் சாலை வசதி வேண்டி கிராம மக்கள் நூதன போராட்டம்

ராமநாதபுரம் சாலை வசதி வேண்டி கிராம மக்கள் நூதன போராட்டம்
X
நவீன காலத்தில் மரண சாலையால் நடந்தே வாழ்க்கையை தொலைக்கும் கிராம மக்கள் கரடு முரடான சாலையில் உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா பெருநாழி அருகே உள்ளது செஞ்சடைநாதபுரம் கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் அன்றாட தேவைக்கு பெருநாழி சென்று அருப்புக்கோட்டை அல்லது சாயல்குடி செல்ல பயன்படுத்தும் இவர்களின் கிராமச்சாலை( மரண சாலை) கடந்த 20 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டு தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக முற்றிலும் மோசமாக இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த கிராமத்திற்கு இலவச மருத்துவ சேவையான 108 வாகனம் கூட வருவது இல்லை, மருத்துவ உதவி என்றால் இருசக்கர வாகனம் மூலம் பெருநாழி வந்து அதன் பின்னர் 108 வாகனம் மூலம் மேல் சிகிச்சைக்காக வெளியூர் செல்லும் நிலை உள்ளது, ஆட்டோ அல்லது கார் சேவை கூட இந்த கிராமம் என்றால் மோசமான சாலையை கருத்தில் கொண்டு முற்றிலும் புறக்கணிக்க படுகிறது. இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கூட தயங்கி தயங்கி இந்த சாலையில் பயணம் செய்யும் நிலை உள்ளது சாலை மோசமாக இருப்பதால் பேருந்து வசதியும் இல்லை, இங்கு இருக்கும் மக்கள் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கூலி தொழிலாளர்கள் என்பதால் தினசரி இந்த குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பயணிக்கும் நிலை 20 வருடங்களாக மாறவே இல்லை. 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெருநாழி ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கிளம்பினால் மட்டுமே சரியான நேரத்திற்கு செல்ல முடியும் ஏனென்றால் சாலை அவ்வளவு மோசமாக உள்ளது இருசக்கர வாகனமில்லாதவர்கள் வீட்டிற்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் 6 கிலோமீட்டர் மோசமான சாலையில் நடந்து பெருநாழி வந்து பொருட்கள் வாங்கி மீண்டும் 6கிலோமீட்டர் என 12 கிலோமீட்டர் செல்ல வேண்டும். மழைக்காலத்தில் இந்த சாலை முழுவதும் மழை நீர் நிரம்பி நடந்து கூட செல்ல முடியாத நிலை இருக்கும் என கூறப்படுகிறது. ஏராளமான முறை அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் எத்தனையோ மனுக்கள் கொடுத்தும் இதுவரை இந்த கிராம சாலைக்கு முடிவு வரவில்லை மோசமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி கரடு முரடான சாலையில் ஆண்கள், பெண்கள் உருண்டும், சாலையில் படுத்தும் போராட்டம் நடத்தினர். சாலையை சீரமைக்க வில்லை என்றால் விரைவில் கிராம மக்கள் அனைவரும் பெருநாழியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.
Next Story