கோவிலூரில் பள்ளி மாணவிகளுக்கு மருத்துவ முகாம்

கோவிலூரில் பள்ளி மாணவிகளுக்கு மருத்துவ முகாம்
X
அரசு ப்பள்ளி மாணவிகளுக்கு சித்த மருத்துவ முகாம்
கோவிலூரில் பெரியநாயகி அம்பாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் முகாம் இன்று நடைபெற்றது. முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை வனிதா தலைமை வகித்தார். இதில் அரசு சித்த மருத்துவர் பிரியதர்ஷினி கலந்துக்கொண்டு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அனைத்து மாணவிகளுக்கும் நினைவாற்றல் அதிகரிக்க வல்லாரை மாத்திரை, இரும்பு சத்து மாத்திரைகள், மாதவிடாய் கோளாறுகள் சரி செய்யும் டானிக், நெல்லிக்காய் இலேகியம் ஆகியவை வழங்கப்பட்டது.சித்த மருத்துவ முக்காமில் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் ஆசிரியைகள் உட்பட பலரும் கலந்துக்கொண்ட நிலையில் பள்ளி உடற்கல்வி ஆசிரியை அனிதா நன்றி கூறினார்.
Next Story