போலி லாட்டரி விற்ற வழக்கில் ஒருவர் கைது

X
Komarapalayam King 24x7 |30 July 2025 12:48 PM ISTகுமாரபாளையம் லாட்டரி விற்றவழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ். நடராஜன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் போலி லாட்டரி விற்பது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார், போலி லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி விஸ்வநாதன், 58, என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து போலி லாட்டரி சீட்டுகள் பரிமுதல் செய்யப்பட்டன. என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து, வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
