காவிரி வெள்ள பகுதிகளை ஆய்வு செய்து ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்

X
Komarapalayam King 24x7 |30 July 2025 12:52 PM ISTகுமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆறுதல் கூறினார்.
மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ள ஒரு லட்சம் கன அடி நீரானது 16 கண் மதகு வழியாக காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து காவிரி கரையோர பகுதி பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பாக மீட்டு வருவாய்த் துறையினர் முகாம்களில் தங்க வைத்துள்ளனர். குமாரபாளையத்தில் கலைமகள் வீதி, அண்ணாநகர், மணிமேகலை வீதி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காவேரி வெள்ள நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நகராட்சி திருமண மண்டபத்திலும், புத்தர் தெரு அரசு உயர்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி வெள்ளம் பாதித்த பகுதிகளான கலைமகள் வீதி அண்ணா நகர் இந்திரா நகர் மற்றும் மணிமேகலை தெரு ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் வெள்ள பாதிப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வருவாய் துறையினரும் கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
Next Story
