வல்வில் ஓரிக்கு மரியாதை செலுத்த ஆலோசனை கூட்டம்

வல்வில் ஓரிக்கு மரியாதை செலுத்த ஆலோசனை கூட்டம்
X
ஆடி. 18 திருவிழாவையொட்டி, வல்வில் ஓரிக்கு மரியாதை செலுத்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆடி. 18 திருவிழாவையொட்டி, வல்வில் ஓரிக்கு மரியாதை செலுத்த ஆலோசனை கூட்டம் நாமக்கல் கோட்டாச்சியர் அலுவலகத்தில், கோட்டாச்சியர் சாந்தி தலைமையில் நடந்தது. இதில் புதிய திராவிடர் கழகம், வல்வில் ஓரி நண்பர்கள் மன்றம் சார்பில், வல்வில் ஓரிக்கு மரியாதை செலுத்த அனுமதி வேண்டி, புதிய திராவிடர் கழகம் கட்சியின் நிறுவன தலைவர் ராஜ் கவுண்டர் தலைமையில் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. இது போல் அனைத்து கட்சியினர், பொதுநல அமைப்பினர், மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பல தரப்பினர் விண்ணப்பம் கொடுத்தனர். விண்ணப்பங்களை பரிசீலித்து ஆக. 2, ஆக. 3, ஆகிய இரண்டு நாட்கள் வல்வில் ஓரிக்கு மரியாதை செலுத்த அனுமதி வழங்கப்படும் எனவும், குறிப்பிட்ட அமைப்பினர், குறிபிட்ட நேரத்தில் வந்து வல்வில் ஓரிக்கு மரியாதை செலுத்தி, பாதுகாப்பு பணிக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்ளப் பட்டது.
Next Story