உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம்: அமைச்சர்,எம்எல்ஏ பங்கேற்பு

X
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம் நடைபெற்றது. இந்த முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா, இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.ச. நாராயண சர்மா,இ.ஆ.ப., செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழுத்தலைவர் உதயா கருணாகரன், துணைத் தலைவர் A.V.M. இளங்கோவன், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

