மகாராஜாகடை அருகே டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலி.

X
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம் சேவாக் (22), அஜய் குமார் (20) ஆகிய 2 பேர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மாம்பழக்கூழ் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் 2 பேரும் மேல்பேட்டை அருகே சாலை ஓரமாக நேற்று முன்தினம் நடந்து சென்ற போது, அந்த வழியாக சென்ற லாரி, ராம் சேவாக், அஜய்குமார் மீது மோதியது. இதில் படு காயம் அடைந்த ராம் சேவாக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அஜய்குமார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர் கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த விபத்து குறித்து, மகாராஜா போலீசார் வழக்குப் பதிவு செய்ய விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story

