மாரிபுத்தூர் செல்லியம்மன் கோவிலில் ஆடி மாத திருத்தேர் உற்சவ விழா

மாரிபுத்தூர் செல்லியம்மன் கோவிலில் ஆடி மாத  திருத்தேர் உற்சவ விழா
X
மாரிபுத்தூர் செல்லியம்மன் கோவிலில் ஆடி மாத திருத்தேர் உற்சவ விழா
மாரிபுத்தூர் செல்லியம்மன் கோவிலில் ஆடி மாத திருத்தேர் உற்சவ விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த வாரிபுத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு செல்லியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்று. தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடி மாத தேர் திருவிழா ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அன்று காப்பு கட்டுகளுடன் தேர் திருவிழா தொடங்கியது இதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது செவ்வாய்க்கிழமை ஸ்ரீ செல்லியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து எட்டாம் நாள் அம்மன் திருத்தேரில் அமர்ந்து முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழா உற்சவத்தில் மாரிபுத்தூர் செல்லியம்மன் தங்க கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்தத் தேர் திருவிழா உற்சவத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story