அங்கன்வாடி செல்லும் குழந்தையை கடத்த முயன்ற பெண்!*

அங்கன்வாடி செல்லும் குழந்தையை கடத்த முயன்ற  பெண்!*
X
அங்கன்வாடி செல்லும் குழந்தையை கடத்த முயன்ற பெண்!* பொதுமக்கள் தர்ம அடி! விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரால் அப்பகுதியில் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் அங்கன்வாடி செல்லும் குழந்தையை கடத்த முயன்ற பெண்!* பொதுமக்கள் தர்ம அடி! விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரால் அப்பகுதியில் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அடுத்த ராஜ கவுண்டனூர் பகுதியைச் சார்ந்த ஈஸ்வரன் புனிதா கூலி தொழில் செய்து வருகிறார் இவர்களின் குழந்தை வைஷ்ணவி(5) அங்கன்வாடி பள்ளிக்கு சென்று வருகிறார் என கூறப்படுகிறது மேலும் இன்று காலையில் குழந்தை வைஷ்ணவி வழக்கம்போல் அங்கன்வாடிக்கு சென்ற பொழுது அங்கு சாமியார் போல் பிச்சை எடுத்து வலம் வரும் பெண் குழந்தையை கடத்த முயற்சி செய்திருக்கிறார் பின்பு குழந்தை வைஷ்ணவி அழுது கொண்டே வீட்டுக்கு ஓடி சென்றுள்ளனர் என தெரிவிக்கிறார்கள் பின்பு வேலைக்கு சென்ற குழந்தை வைஷ்ணவி அம்மா புனிதாவிற்கு தன் பிள்ளையை யாரோ கடத்திச் செல்வதாக கூறியதன் பேரில் வேலையை விட்டு வீடு திரும்பியுள்ளார் பின்பு பொதுமக்களை கண்டவுடன் கடத்தலில் ஈடுபட்ட பெண் தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது பின்பு ஊர் பொதுமக்கள் அந்த பெண்ணை பிடித்து விசாரணை செய்து வந்தனர் பின்பு காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள் தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை செய்து கொண்டிருக்கும் பொழுது பொதுமக்கள் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர் பின்பு பொதுமக்களிடமிருந்து பெண்ணை பத்திரமாக மீட்டு காவல்துறைக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கன்வாடி பள்ளியில் படிக்கும் குழந்தையை சாமியாரைப் போல் பிச்சை எடுத்து குழந்தையை கடத்த முயன்ற பெண்ணால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது
Next Story