திருப்பத்தூர் அருகே கடன் தொல்லையால் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கடன் பிரச்சினையால் தந்தை மகன் விசம் குடித்தில் தந்தை உயிரிழப்பு மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி போலீசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ராமன் (வயது 65) இவருக்கு திருமணமாகி செண்பகவல்லி என்ற மனைவியும் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளன. ராமன் இவரது மகன் சுரேஷ் (வயது 30) இவருக்கு திருமணம் ஆகி உள்ள நிலையில். இவர் கடன் பெற்று இரண்டு லாரி வாங்கி தொழில் செய்து வந்தார் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் விபத்தில் கால் ஊனம் அடைந்த பின்பு தொழிலில் நஸ்ட்டம் ஏற்படவே லாரியை விற்று ஒரு பகுதி கடனை அடைத்துள்ளார். மேலும் கடன் தீராததால் நிலம் மற்றும் வீடு விற்று கடன் தீர்த்துள்ளார். வீட்டை காலி செய்ய மனம் இல்லாததால் மகன் மற்றும் தந்தை இருவரும் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை இன்று குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்தபோது ராமன் உயிரிழந்த நிலையில் சுரேஷ் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சுரேஷுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தகவல் அறிந்து சம்படத்திற்குச் சென்ற கந்திலி போலீசார் ராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருப்பத்தூர் அருகே கடன் பிரச்சினையால் தந்தை மகன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ததில் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

