காவிரியில்குறைந்த வெள்ளம்வருவாய்த்துறையினர் தவிப்பு

காவிரியில்குறைந்த வெள்ளம்வருவாய்த்துறையினர் தவிப்பு
X
காவிரியில் குறைந்த வெள்ளத்தால் வருவாய்த்துறையினர் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்
குமாரபாளையம் பகுதி காவிரியில் குறைந்த வெள்ளத்தால் வருவாய்த்துறையினர் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த ஒரு லட்சம் கன அடி, 1.50 கன அடி நீரானது 16 கண் மதகு வழியாக காவிரியில் திறந்து விடப்பட்டு வந்தது. காவிரி கரையோர பகுதி பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பாக மீட்டு வருவாய்த் துறையினர் முகாம்களில் தங்க வைத்துள்ளனர். குமாரபாளையத்தில் கலைமகள் வீதி, அண்ணாநகர், மணிமேகலை வீதி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காவேரி வெள்ள நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு கலைமகள் நகராட்சி திருமண மண்டபத்திலும், புத்தர் தெரு அரசு உயர்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேளையும் அரசு சார்பிலும், அரசியல் கட்சியினர் சார்பிலும் உணவு வழங்கப்பட்டு வந்தது. முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரும், தற்போது குமாரபாளையம் எம்.எல்.ஏ.வுமான தங்கமணி, தி.மு.க. மாவட்ட செயலர் மூர்த்தி, மாவட்ட கலெக்டர் துர்கா உள்ளிட்ட பலரும் , மையங்களில் உள்ளவர்களை அடிக்கடி வந்து பார்த்து அறுதல் கூறி வந்தனர். தற்போது மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் நீரானது, 50 ஆயிரம் கன அடியாக குறைந்தது என தகவல்கள் வந்து கொண்டுள்ளது. நீரின் அளவு குறைந்ததால், முகாமில் தங்கியுள்ள பொதுமக்களை அவர்கள் வீட்டிற்கு அனுப்புவதா? அல்லது ஓரிரு நாட்கள் பார்த்து அனுப்புவதா? என தெரியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
Next Story