வாங்க பாளையம்-பேருந்தில் பயணிக்க ஏறிய பெண்-டிரைவர் திடீரென பிரேக் இட்டதால் கீழே விழுந்து விபத்து.

வாங்க பாளையம்-பேருந்தில் பயணிக்க ஏறிய பெண்-டிரைவர் திடீரென பிரேக் இட்டதால் கீழே விழுந்து விபத்து.
வாங்க பாளையம்-பேருந்தில் பயணிக்க ஏறிய பெண்-டிரைவர் திடீரென பிரேக் இட்டதால் கீழே விழுந்து விபத்து. கரூர் மாவட்டம் , வெண்ணமலை அரசு பள்ளி பின்புறம் வசித்து வருபவர் கேசவன் மனைவி சாந்தி வயது 56. இவர் ஜூலை 28ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில் , கரூர் - பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் வாங்கப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் பேருந்தில் பயணிக்க நின்று இருந்தார். அப்போது கரூர் வேலாயுதம்பாளையம் சிவராமன் நகரை சேர்ந்த கார்த்திக் வயது 39 என்ற அரசு பேருந்து ஓட்டுனர் ஓட்டி வந்த பேருந்தில் ஏறி பேருந்தில் அமர முற்பட்டார் சாந்தி. அப்போது பேருந்து டிரைவர் கார்த்திக் பேருந்தை வேகமாக இயக்கி திடீரென பிரேக் இட்டதால் சாந்தி நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்துவிபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக சாந்தி அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட வெங்கமேடு காவல்துறையினர் பேருந்தை வேகமாக இயக்கி விபத்து ஏற்படுத்திய கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.
Next Story