நொச்சிப்பட்டி- சமையல் செய்யும் போது தீப்பிடித்து பெண் உயிர் இழப்பு.

நொச்சிப்பட்டி- சமையல் செய்யும் போது தீப்பிடித்து பெண் உயிர் இழப்பு.
நொச்சிப்பட்டி- சமையல் செய்யும் போது தீப்பிடித்து பெண் உயிர் இழப்பு. கரூர் மாவட்டம் வாகனத்தம் அருகே நொச்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி பழனியம்மாள் வயது 50 இவர் ஜூலை 27ஆம் தேதி காலை 9 மணி அளவில் அவரது வீட்டில் விறகு அடுப்பில் சமையல் வேலையில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அடுப்பில் இருந்த தீ பழனியம்மாள் சேலையில் பற்றி எரிந்தது. இதனால் அலரி அடித்து கூச்சலிட்டு கீழே விழுந்தார். இதற்குள்ளாக அவரது சேலையில் பற்றிய தீ அவர் உடலில் 50 சதவீதத்திற்கும் மேலாக தீக்காயங்களை ஏற்படுத்தியது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி ஜூலை 29ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பழனியம்மாள் கணவர் சுப்பிரமணி அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளியணை காவல்துறையினர் உயிரிழந்த பழனியம்மாளின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல்துறையினர்.
Next Story