கோவை: கீழடி அறிக்கை வெளியீடு கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் !

X
கீழடி அகழாய்வு தொடர்பான அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள் நிலையத்திற்குள் செல்ல முயன்றபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் நிலையம் வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மாநில தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய அரசு அறிக்கை வெளியீட்டை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும், தமிழர்களின் தொன்மையான வரலாறு மறைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story

